Tamil Hymn க-வி

நாமும் ஆற்றண்டை சேர்வோமா


நாமும் ஆற்றண்டை சேர்வோமா?
தூதர் கால்கள் சென்ற பூமி,
என்றும் மின்னும் பளிங்காக,
நம் ஆண்டவர் சிம்மாசனம்,


பல்லவி
ஆம் நாம் ஆங்கே ஒன்றாய் சேர்வோம்,
அவ்வழகான அழகான ஊற்று,
தூதரோடு சேர்ந்தே நாமும்
ஆண்டவர் சன்னதி முன்பாக.


நாமும் கரையோரம் வந்து,
அந்த வெள்ளி ஊற்றை கண்டு,
போற்றி பாடி தொழுதேற்றி,
நல் வெண்ணங்கி கிரீடமும்,


அங்கே வந்ததும் நம் பாரம்,
எல்லா துன்பத்தையும் வைத்தே,
கிருபை நம்மை மீட்கும் பாரேன்,
அந்த நாள் முழுதும் தொழுவோம்,


மகிழ் கொண்டு வீசும் ஊற்று,
காண்போம் ஆண்டவரின் முகம்,
தூயோர் நித்ய வாழ்வு வாழ,
இன்ப பாடல்கள் கேட்குமே,


வேகம் நாமும் அங்கே சேர்வோம்,
ஓயும் நம் பியாணம் அன்று,
மகிழ்கொள்ளும் நமதுள்ளம்,
நாமும் சாந்தமாய் பாடிடுவோம்.

 


பக்தரே அண்ணாந்து பாரும்


1.பக்தரே! அண்ணாந்து பாரும்!
யேசு வெற்றி வேந்தராய்
வானில் தோன்ற, மாந்தர் யாரும்
சேவிப்பாரே தாழ்மையாய்.


பல்லவி
வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க!
வாழ்க! ராஜ ராஜரே!
வாழ்க! வாழ்க என்றும் வாழ்க!
வாழ்க! ராஜ ராஜரே!


2.தேவதூதர் க்ரீடம் சூட்ட
ராஜரீகம் செய்கிறார்.
யாரும் ஜெய கீதம்பாட,
க்ரீடதாரியாகிறார்.


3.தீயரும் முண்முடி சூட்டி
நிந்தையாக வாழ்த்தினார்.
தூய தூதர் வெற்றி கூறிச்
சேவித் தாரவாரிப்பார்.


4.பாரும் ராஜ அபிஷேகம்!
ஆரவாரம் கேளுமேன்.
யேசுவின் சர்வாதிகாரம்
பூமி எங்கும் கூறுமேன்

 


பக்தரே வாரும்


1. பக்தரே வாரும்
ஆசை ஆவலோடும்
நீர் பாரும், நீர் பாரும்
இப்பாலனை;
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!


Chorus
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.


2. தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்;


3. மேலோகத்தாரே,
மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப்
போற்றுமேன்;
விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!


4. இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்.