Tamil Hymn க-வி

வயல் உழுது தூவி


1.வயல் உழுது தூவி
நல் விதை விதைப்போம்;
கர்த்தாவின் கரம் அதை
விளையச் செய்யுமாம்;
அந்தந்தக் காலம் ஈவார்
நற்பனி மழையும்
சீதோஷ்ணம் வெயில் காற்று
அறுப்பு வரையும்.


Ref
நல் ஈவுகள் யாவும்
ஈபவர் கர்த்தரே;
துதிப்போம் என்றும் துதிப்போம்
அவர் மா அன்பையே.


2.விண் வானம் ஆழி பூமி
அவரே சிருஷ்டித்தார்;
புஷ்பாதி விண் நட்சத்திரம்
பாங்காய் அமைக்கிறார்;
அடக்கி ஆழி காற்று
உண்பிப்பார் பட்சிகள்;
போஷிப்பிப்பார் அன்றன்றும்
மைந்தாராம் மாந்தர்கள்.


3.நல் ஈவு பலன் பாக்கியம்
விதைப்பு அறுப்பை
ஜீவன் சுகம் ஆகாரம்
தரும் பிதா உம்மைத்
துதிப்போம், அன்பாய் ஏற்பீர்
படைக்கும் காணிக்கை;
யாவிலும் மேலாய்க் கேட்கும்
தாழ்மையாம் உள்ளத்தை.

 


வல்லமை உண்டு உண்டு


வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
இயேசுவின் இரத்தத்தில்!
வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்!


Vallamai Unndu Unndu Arputha Vallamai
Yesuvin Iraththaththil!
Vallamai Unndu Unndu Arputha Vallamai
Aattukkuttiyin Iraththaththaal!

 


வாரும் வான் இராஜனே

வாரும் வான் இராஜனே
பா தாரும் நாவிலே, போற்றிடவே,
வல்ல எம் தந்தையே
வெற்றியின் வேந்தரே
வந்தெம்மை ஆளுமே சதாகாலம்.

வார்த் தையின் மாம்சமே,
பட்டயம் கொண்டுமே,ஜெபம் கேளும்,
உம் வார்த்தை வென்றிடும்
தூயாவி ஜீவனே நீர்
வந்தெம்மீதிலே இரங்கிடும்.

தேற்றரவாளரே,
தெய்வீக சாட்சியே,இவ்வேளையில்,
வல்லமை தேவன் நீர்,
எம் நெஞ்சம் ஆளுமே
விட்டகலாதிரும் உம் ஆவியால்.

மூவரில் ஒன்றாம் நீர்,
மகிமை மாட்சியும், என்றென்றுமே,
உம் மகா மேன்மையே யாம்
காண கேட்க்கிறோம்
என்றும் எக்காலமும் அன்பாய்த்தொழ. ஆமேன்.