நான் பாவிதான்
1. நான் பாவிதான், – ஆனாலும் நீர்
மாசற்ற ரத்தம் சிந்தினீர்
‘வா’ என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன்.
2. நான் பாவிதான், – என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே,
என் மீட்பரே, வந்தேன்.
3. நான் பாவிதான், – மா பயத்தால்
திகைத்து, பாவ பாரத்தால்
அமிழ்ந்து மாண்டுபோவதால்
என் மீட்பரே, வந்தேன்.
4. நான் பாவிதான், – மெய்யாயினும்
சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே, வந்தேன்.
5. நான் பாவிதான், – இரங்குவீர்
அணைத்து, காத்து, ரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வந்தேன்.
6. நான் பாவிதான், – அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்
உமக்கு சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வந்தேன்
நீர் தந்த நாளும்
1. நீர் தந்த நாளும் ஓய்ந்ததே
கர்த்தாவே ராவும் வந்ததே
பகலில் உம்மைப் போற்றினோம்
துதித்து இளைப்பாறுவோம்.
2. பகலோன் ஜோதி தோன்றவே
உம் சபை ஓய்வில்லாமலே
பூவெங்கும் பகல் ராவிலும்
தூங்காமல் உம்மைப் போற்றிடும்.
3. நாற்றிசையும் பூகோளத்தில்
ஓர் நாளின் அதிகாலையில்
துடங்கும் ஜெபம் ஸ்தோத்ரமே
ஓர் நேரம் ஓய்வில்லாததே.
4. கீழ்கோளத்தோர் இளைப்பாற
மேல்கோளத்தோர் எழும்பிட
உம் துதி சதா நேரமும்
பல் கோடி நாவால் எழும்பும்.
5. ஆம், என்றும் ஆண்டவரே நீர்,
மாறாமல் ஆட்சி செய்குவீர்;
உம் ராஜ்யம் என்றும் ஓங்கிடும்
சமஸ்த சிருஷ்டி சேர்ந்திடும்.
நேர்த்தியானதனைத்தும்
Ref
நேர்த்தியானதனைத்தும்
சின்னம் பெரிதெல்லாம்
ஞானம், விந்தை ஆனதும்
கர்த்தாவின் படைப்பாம்.
1. பற்பல வர்ணத்தோடு
மலரும் புஷ்பமும்,
இனிமையாகப் பாடி
பறக்கும் பட்சியும்.
2. மேலோர், கீழானோரையும்
தத்தம் ஸ்திதியிலே,
அரணில், குடிசையில்
வசிக்கச் செய்தாரே.
3. இலங்கும் அருவியும்,
மா நீல மலையும்
பொன் நிற உதயமும்
குளிர்ந்த மாலையும்.
4. வசந்த காலத் தென்றல்,
பூங்கனித் தோட்டமும்
காலத்துக்கேற்ற மழை,
வெய்யோனின் காந்தியும்.
5. மரமடர்ந்த சோலை
பசும் புல் தரையும்,
தண்ணீர்மேல் தாமரைப்பூ,
மற்றெந்த வஸ்துவும்.
6. ஆம், சர்வவல்ல கர்த்தா
எல்லாம் நன்றாய்ச் செய்தார்
இதை நாம் பார்த்துப் போற்ற
நாவையும் சிஷ்டித்தார்.
பக்தரே அண்ணாந்து பாரும்
1.பக்தரே! அண்ணாந்து பாரும்!
யேசு வெற்றி வேந்தராய்
வானில் தோன்ற, மாந்தர் யாரும்
சேவிப்பாரே தாழ்மையாய்.
பல்லவி
வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க!
வாழ்க! ராஜ ராஜரே!
வாழ்க! வாழ்க என்றும் வாழ்க!
வாழ்க! ராஜ ராஜரே!
2.தேவதூதர் க்ரீடம் சூட்ட
ராஜரீகம் செய்கிறார்.
யாரும் ஜெய கீதம்பாட,
க்ரீடதாரியாகிறார்.
3.தீயரும் முண்முடி சூட்டி
நிந்தையாக வாழ்த்தினார்.
தூய தூதர் வெற்றி கூறிச்
சேவித் தாரவாரிப்பார்.
4.பாரும் ராஜ அபிஷேகம்!
ஆரவாரம் கேளுமேன்.
யேசுவின் சர்வாதிகாரம்
பூமி எங்கும் கூறுமேன்
பக்தரே வாரும்
1. பக்தரே வாரும்
ஆசை ஆவலோடும்
நீர் பாரும், நீர் பாரும்
இப்பாலனை;
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!
Chorus
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.
2. தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்;
3. மேலோகத்தாரே,
மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப்
போற்றுமேன்;
விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!
4. இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்.