Tamil Hymn க-வி

சிலுவையண்டையில்


1.நான் உம்மைப் பற்றி இரட்சகா
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்


Chorus:
சிலுவையண்டையில்
நம்பி வந்து நிற்க்கையில்
பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்


2.ஆ உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்


3.மா வல்ல வாக்கின் உண்மையைக்
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்


4.நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்


1. Naan Ummai Patri Ratchaga
Veen Veetkam Adaiyen
Peranbai Kurith Aandava
Naan Saatchi Kooruven


Chorus:
Siluvaiyandayail Nambi Vanthu Nirkayil
Paava Baaram Neengi Vaazhvadainthen
Entha Neramum Enadh Ullathillum
Peranatham Pongi Paaduven


2. Ah Unthan Nalla Namathai
Naan Nambi Saarvathaal
Neer Kaivideer Ivvelayil
Kaapeer Devaviyal


3. Maa Valla Vaakkin Unmaiyai
kanndunara seitheer
Naan Oppuvitha Porulai
Vidaamal kaakkireer


4. Neer Maatchiyodu Varuveer
Appodhu Kalipaen
Oor Vaasasthalam Kodupeer
Mei Baakyam Adaiven

 


சிலுவையினண்டையில்


நான் வாஞ்சித்தோனாய் காத்து சிலுவையண்டையில்,
கற்பாறையின் நல் நிழலில் இச்சோர்ந்த பூமியில்,
வனாந்திரத்தில் ஓர் வாசமே வெம் கோடை காய்ச்சலில்,
ஓர் தாபரம் யாம் தங்கி ஓய சோர்ந்தபாதையில்.


ஆனந்தமான நிழல் வந்தோர்க்கு இன்பமே,
விண் வீட்டின் நீதி திக்கற்றோரும் ஆனந்திக்க,
இவ்வாக்குத்தத்தம் தந்தாரே மா தூய வார்த்தையே,
என் இயேசுவின் சிலுவையே விண்ணேகும் வழியாம்.


அப்பாலே அங்கே ஆழி மா இருள் சூழ்ந்துமே,
மரண குழி உண்டங்கே பாதாள அகலம்,
இதன் இடையே நிற்குதே நம் நேசர் சிலுவை,
தம் கைகள் விரித்தே நம் நித்ய வாழ்வின் பாதையாம்.


என் கண்கள் காணுதே ஆம் எனக்காய் மாண்டதை,
வேதனையுடன் காண்கிறேன் அவர் துன்புற்றதை,
என் நொந்த உள்ளம் கொண்டே நான் கண்ணீரோடே நின்றே,
இவ்விந்தை அன்பும் பரிவும் என் பாத்ரமின்மையும்.


இன்நிழலில் நானுமே ஆம் தஞ்சமாயினேன்,
வேரென்ன நான் வாஞ்சிப்பேனே அவர் பிரகாசமே,
ஆம் போதும் அது எனக்கு வேறொன்றும் வாஞ்சியேன்,
என் பாவ தேகம் எந்தன் வெட்கம் மேன்மை சிலுவை.

 


திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா


திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா
கேட்டு உம்மை அண்டினேன்
இன்னும் கிட்டிச் சேர என் ஆண்டவா
ஆவல் கொண்டிதோ வந்தேன்


Ref
இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
பாடுபட்ட நாயகா
இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமேன்
ஜீவன் தந்த இரட்சகா


என்னை முற்றுமே இந்த நேரத்தில்
சொந்தமாக்கிக் கொள்ளுமேன்
உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில்
நாடித் தேடச் செய்யுமேன்


திருப்பாதத்தில் தங்கும் போதெல்லாம்
பேரானந்தம் காண்கிறேன்
உம்மை நோக்கி வேண்டுதல் செய்கையில்
மெய் சந்தோஷமாகிறேன்


இன்னும் கண்டிராத பேரின்பத்தை
விண்ணில் பெற்று வாழுவேன்
திவ்ய அன்பின் ஆழமும் நீளமும்
அங்கே கண்டானந்திப்பேன்

Thivya anbin sathathai Lyrics in English


thivya anpin saththaththai iratchakaa
kaettu ummai anntinaen
innum kittich sera en aanndavaa
aaval konntitho vanthaen


Ref
innum kitta kitta serththuk kollumaen
paadupatta naayakaa
innum kitta kitta serththuk kollumaen
jeevan thantha iratchakaa


ennai muttumae intha naeraththil
sonthamaakkik kollumaen
ummai vaanjaiyodenthan ullaththil
naatith thaedach seyyumaen


thiruppaathaththil thangum pothellaam
paeraanantham kaannkiraen
ummai Nnokki vaennduthal seykaiyil
mey santhoshamaakiraen


innum kanntiraatha paerinpaththai
vinnnnil pettu vaaluvaen
thivya anpin aalamum neelamum
angae kanndaananthippaen