Tamil Hymn க-வி

விண்ணின் தூதர் கீதமே


விண்ணின் தூதர் கீதமே
மண்ணில் பாட கேட்போமே
பண் இசைக்கும் மழைகளும்
விண்ணோர் கானம் கேட்குமே


Ref
உன்னதத்தில் மாமகிமை
பூமியில் சமாதானமும்
மனிதர் மேல் பிரியம்(x2)


மேய்ப்பரே நீர் கூறுவீர்
ஏன் இந்த கொண்டாட்டமே
மகிழ் கீதம் பாடிட
என்ன செய்தி கேட்பீரோ


வாரும் பக்தரே முன்னனை
பாரும் தூதர் பாடிடும்
இராஜ பாலன் இயேசுவை
பணிந்தே வணங்குவோம்


வானம் பூமி ஆண்டிடும்
பாலன் இயேசு இங்கிதோ
மரியாள் யோசேப்புடன்
நாமும் சேர்ந்து பாடுவோம்.

 


விந்தை குழந்தையோ


மரியின் மடியில்
ஓய்ந்து தூங்கிடும்
பாலன் பார் இது விந்தையே?
விண் தூதர் ஆனந்த கீதம் பாடினர்
மேய்ப்பர்கள் மந்தையை காக்க,
இராஜாதி ராஜன் கிறிஸ்துவே,
மேய்ப்பர் கண்டிட தூதர் பாட,
வேக வேகமாய் செல்வோம் பாலனை
போற்றி நாம் பாடியே வாழ்த்த.


ஏன் ஏழைக்கோலமாய்
தாழ்மை ரூபமாய்
மாடடையும் குடிலிலே,
நாம் பாவிகட்காகவே
பயந்து வேண்டியே
சாந்த்தமாய் நின்றங்கே காண்போம்,
கூர் ஆணிகள் பாயும், யாவுமே
உனக்காய் எனக்தாய் சகித்தாரே,
வார்த்தை மாம்சமாயானதின்றிங்கே
மரியன்னையின் மைந்தனே.


பொன் வெள்ளியும்
தூபவர்க்கமும் நாம் தந்திட்டு
வீழ்ந்து பணிந்து வணங்குவோம்,
நீர் ராஜாதி ராஜனாய்
இரட்சிப்பை தந்திட
வந்தீரே வேந்தரே வாழ்க,
போற்றி பாடியே வாழ்த்தி ஏற்றியே
மரியன்னையுடன் பாடிடுவோம்,
ஆ ஆனந்தம் மீட்ப்பர் மண்ணிலே
நமக்காய் பிறந்தார் மகிழ்வோம்.