Tamil Hymn க-வி

பேரன்பர் இயேசு நிற்கிறார்


1.பேரன்பர்இயேசு நிற்கிறார்
மகா வைத்தியனாக
கடாட்சமாகப் பார்க்கிறார்
நல் நாமம் போற்றுவோமே


பல்லவி
விண்ணில் மேன்மை பெற்றதே
மண்ணோர்க் கின்பமாகவே
பாடிப்போற்றும் நாமமே
இயேசு என்னும் நாமம்


2.உன் பாவம் யாவும் மன்னிப்பேன்
அஞ்சாதே என்கிறாரே;
சந்தேகங் கொண்டு சோர்வதேன்?
மெய்ப் பாக்கியம் ஈகிறாரே


3.உயிர்த்த ஆட்டுக்குட்டிக்கே
மேன்மை உண்டாவதாக!
நேசிக்கிறேன் இயேசு நாமம்
நம்பிடுவேன் என்றென்றும்


4.குற்றம் பயம் நீக்கும் நாமம்
வேறில்லை இயேசுவே தான்!
என் ஆத்மா பூரிப்படையும்
அந்நாமம் கேட்கும்போது


Pearanbar yesu nirkiraar
Maha Vaithiyanaaga
Kadatchamaaga paarkiraar
Nal Naamam pottruvom


Ref
Vinnil Meanmai Pettrathae
Mannorkku Inbamaagavae
Paadi pottrum Naamamae
Yesu Ennum Naamam


Un paavam yaavaiyum Mannippean
Anjaathae Enkiraarare
Santhaekam kondu saervathaen
Mei bakkiyam Eegiraarae


Uyirtha Aattu kuttikae
Meanmai Undavathaaga
Neasikkirean Yesu Naamam
Nambiduvean Entrentrum


Kuttram Bayam Neekkum Naamam
Vearillai Yesuvae Thaan
En Aathuma Poorippadaiyum
Annaamam Keatkkum Pothu

 


போற்றுவேன் என் மீட்பர்


போற்றுவேன் என் மீட்பர் அன்பை!
ப்ராணன் தந்து ரட்சித்தார்.
பாடுபட்டு, ரத்தஞ் சிந்தி,
பாவம், சாபம் நீக்கினார்.


பல்லவி
போற்றும்! போற்றும்!! அல்லேலூயா!
பூர்ண மீட்புண்டாக்கினார்.
தூய வல்ல ரத்தம் சிந்தி,
தீய பாவம் நீக்கினார்.


நீசப் பாவி என்றன் பேரில்
நேசம் வைத்துக் காட்டினார்.
மீட்கும் பொருளாகத் தம்மை
முற்றும் தந்திடேற்றினார்.


போற்றுவேன் சம்பூர்ண மீட்பை!
நேச நாதர் காக்கிறார்,
வாழ்நாள் எல்லாம் பாவத்தின் மேல்
வெற்றி காணச் செய்கிறார்


போற்றுவேன் ஆனந்தமாகப்
பாடி நன்றி சொல்லுவேன்!
என்னை மீட்ட ஏசுவோடே
என்றும் தங்கி, சேவிப்பேன்.

or


என் மீட்பர் அன்பை என்றென்றும் நானே,
போற்றி பாடி புகழுவேன்,
அவர் எனக்காய் சிலுவையிலே,
துன்புற்று மாண்டார், எனக்காக,


பல்லவி
போற்றிப்பாடுவேன் மீட்பர் அன்பை,
இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டாரே,
சிலுவையாலே என்னை மன்னித்தார்,
என் கடன் தீர்த்தே தந்தாரே, விடுதலை.


அவர் நற்செய்தி யாவர்க்கும் சொல்வேன்
அளவில்லாத அவர் அன்பு, இலவசமாய்
நம்மை இரட்சித்தார், அவரின் அன்பை,
எங்கும் சொல்வேன்,


சாவின் மீதே ஜெயம்கொண்டாரே,
எங்கும் நான் சொல்வேன் அவர் மாண்பை,
மரணமே உன் கூர் எங்கே, எங்கே?
பாதாளமே உன் ஜெயமெங்கே,


இயேசுவின் அன்பு தெய்வீக அன்பு
என்னையும் மீட்டார், முற்றிலுமாய்
தேவகுமாரன் தம்முடன் வாழ,
இன்றும் என்றும் நித்தியமுமாய்.

 


மகா அற்புதம்


மகா அற்புதம், மா பாவியாம் என்னை
மீட்ட உம் அன்பு தொலைந்தலைந்தேனே
என்னை கண்டீரே, கண் காணேனிப்போ காண்கிறேன்.


உம் கிருபையினால், நான் நடுங்கி,
உம் தயவால் மீண்டேன் உம் காருண்யம்தான்
என் ஆஸ்தியாம், நான் நம்பினவேளை முதல்.


என் வாழ்வில் நான் கடந்தது,
துன்பம் மா வேதனை, உம் வல்லமை,
இம்மட்டுமே வழி நடத்திற்றே.


என் தேவன் எனக்காய்த்தந்த,
தம் வாக்குதத்தம் உண்மை வர் என்னை
தற்காப்பாரே, வாழ் நாள் முழுதுமே.


என் மாம்சமும் என் துடிப்பும்,
நின்று நான் சாகையில் என்னுள்ளில் அவர்
தந்ததே, இன்ப சமாதானமே.


பனி போலவே, இவ்வுலகம்,
சூர்யனும் தோன்றாதே,நம் தேவன் இன்றும்
என்றும் உண்டங்கே,இருப்பார் நம்முடன்.


அங்கே நாம் என்றும் வாழ்வோம் நித்யம்,
பிரகாசமாய் தோன்றி, என்றென்றும் நாம் அவர்
துதி பாடி போற்றி மகிழ்வோம்.