Tamil Hymn க-வி

தோட்டத்திலே


1. நான் தோட்டத்தில் தனியனாய்,
பனி சாரல் ரோஜாவின் மீது,
எந்தன் காதில் ஓசை நான் கேட்கிறேன்,
என் இயேசு மீட்பர் சப்தமே,


பல்லவி:
அவர் என்னுடனே நடக்கிறார்,
அவர் சொந்தம் நான் என்கிறார்,
என்ன இன்பம் நாம் அவர் பிள்ளைகள்,
வேர் யாரும் அறியாரே.


2. இனிமையாம் அவர் குரல்,
அங்கு பாடும் பறவை கேட்க,
அந்த கீதம்தான் அவர் தந்ததே,
என் ஆன்மா பாடுதே இதோ,


3. நான் அவருடனிருப்பேன்,
இன்னும் இராமுழுவதும் இங்கே,
என்னை போவென்றார் அவர் அன்பின்
வார்த்தை என்னை ஈர்த்ததே இதோ,

 


நடுக்குளிர் காலம்


1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம் பனிக்கட்டிபோலும் குளிரும் எல்லாம், மூடுபனி ராவில் பெய்து மூடவே; நடுக் குளிர் காலம் முன்னாளே


2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே,
அவர்முன் நில்லாது அவை நீங்குமே;
நடுக் குளிர் காலம் தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில் போதுமே


3. தூதர் பகல் ராவும் தாழும் அவர்க்கு,
மாதா பால் புல் தாவும் போதுமானது;
கேருபின் சேராபின் தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும் போதுமே


4. தூதர் தலைத்தூதர் விண்ணோர் திரளும்
தூய கேரூப்ப சேராப் சூழத் தங்கினும்,
பாக்கிய கன்னித் தாயே நேச சிசு தான்
முக்தி பக்தியோடு தொழுதாள்


5. ஏழை அடியேனும் யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின் மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம் கொண்டு சேவிப்பேன்;
யானோ எந்தன் நெஞ்சம் படைப்பேன்

 


நம்பிடுவேன் எந்நாளும்


1. நம்பிடுவேன் எந்நாளும்
துன்பம் துயரானாலும்;
எந்தன் இயேசு நாதனை
அந்தம் மட்டும் பற்றுவேன்!


பல்லவி
நேரங்கள் பறந்தாலும்
நாட்கள் தான் கடந்தாலும்
என்ன தான் நேரிட்டாலும்
இயேசுவையே நம்புவேன்


2. ஏழை எந்தன் நெஞ்சிலே
வாழ்கிறார் சுத்தாவிதான்
பாதை காட்டி எந்தனை
பாதுகாத்துக் கொள்கிறார்


3. பாடுவேன் என் பாதையில்
பிரார்த்திப்பேன் என் தொல்லையில்
கேடு வரும் போதும் நான்
கிட்டி இயேசை நம்புவேன்


4. ஜீவிக்கின்ற காலமும்
சாகும் அந்த நேரமும்
சேரும் மோட்ச வீட்டிலும்,
இயேசுவையே நம்புவேன்