துன்பம் உன்னை
துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்
இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
பல்லவி
எண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்
கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்
ஆசீர்வாதம் ஏன்னு ஒவ்வொன்றாய்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
கவலைச் சுமை நீ சுமக்கும் போது
சிலுவை உனக்கு பளுவாகும் போதும்
எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர் வாதம்
கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும்
நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது
நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு
பணங் கொள்ளா பேராசீர் வாதத்தைப் பார்
பரலோக பொக்கிஷமும் வீடும் பார்
அகோரத் துன்பங்கள் உன்னைச் சூழ்ந்தாலும்
அதைரியப்படாதே கர்த்தர் உன் பக்கம்
அநேகமாம் நீ பெற்ற சிலாக்கியங்கள்
தூதர் உன்னை தேற்றுவார் பிரயாணத்தில்
Thunpam unnaich soolnthalaik kalinthaalum
Inpam ilanthaen entennnni sornthaalum
Ennnnip paar nee petta paeraaseervaatham
Karththar seytha yaavum viyappaith tharum
Pallavi
Ennnnip paar nee petta paakkiyangal
Karththar seytha nanmaikal yaavum
Aaseervaatham aennu ovvontay
Karththar seytha yaavum viyappaith tharum
Kavalaich sumai nee sumakkum pothu
Siluvai unakku paluvaakum pothum
Ennnnip paar nee petta paeraaseer vaatham
Karththar seytha yaavum viyappaith tharum
Nilam ponnullorai nee paarkkumpothu
Ninai kiristhuvin aisuvariyam unndunakku
Panang kollaa paeraaseer vaathaththaip paar
Paraloka pokkishamum veedum paar
Akorath thunpangal unnaich soolnthaalum
Athairiyappadaathae karththar un pakkam
Anaekamaam nee petta silaakkiyangal
Thoothar unnai thaettuvaar pirayaanaththil
தூய்மை பெற நாடு
1. தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே
நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே;
கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்,
யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்.
2. தூய்மை பெற நாடு; லோகக் கோஷ்டத்தில்
தனித்திரு நாளும் அவர் பாதத்தில்
யேசுவைப் போலாவாய் நோக்கின் அவரை
பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை.
3. தூய்மை பெற நாடு; கர்த்தர் நடத்த
என்ன நேரிட்டாலும், அவர் பின் செல்ல
இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை
நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை
4. தூய்மை பெற நாடு; ஆத்மா அமர்ந்து
சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு,
அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்க,
முற்றும் தூய்மையாவாய் விண்ணில் வசிக்க.
1. thooymai pera naadu; karththar paathamae
nilaiththavar vaarththai utkollentumae;
kooti paktharodu sornthor thaanguvaay,
yaavilumae theyva thayai naaduvaay.
2. thooymai pera naadu; lokaththil koshdaththil
thaniththiru naalum avar paathaththil
yaesuvaip polaavaay, Nnokkin avarai
paarppor unnil kaannpaar avar saayalai.
3. thooymai pera naadu; karththar nadaththa,
enna naerittalum, avarpin sella;
inpam thunpam naernthum vidaay avarai,
Nnokkiyavar vaakkil vaippaay nampikkai.
4. thooymai pera naadu; aathmaa amarnthu,
sinthai seykai yaavum avarkkutpattu,
anpin jeeva oottaைch sernthu rusikka,
muttum thooymaiyaavaay vinnnnil vasikka.
தெய்வ சமாதான
1. தெய்வா சமாதான இன்ப நதியே
மா பிரவாகமான வெள்ளம் போலவே
நிறைவாகப் பாயும் ஓய்வில்லாமலும்
ஓட ஆழமாயும் நித்தம் பெருகும்
Refrain
அருள் நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன்
நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன்
2. கையின் நிழலாலே என்னை மறைத்தார்
சத்ரு பயத்தாலே கலங்க விடார்
சஞ்சலம் வராமல் அங்கே காக்கிறார்
ஏங்கி தியங்காமல் தங்கச் செய்கிறார்.
3 சூர்ய ஜோதியாலே நிழல் சாயையும்
காணப்பட்டாற் போலே துன்பம் துக்கமும்
ஒப்பில்லா பேரன்பாம் சூர்ய சாயையே
அதால் வாழ் நாள் எல்லாம் சோர மாட்டேனே
1. Theyva samaathaana inpa nathiyae
Maa piravaakamaana vellam polavae
Niraivaakap paayum oyvillaamalum;
Oda aalamaayum niththam perukum
Ref
Arulnaathar meethil saarnthu sukippaen,
Niththam ilaippaaral pettu vaaluvaen.
2. Kaiyin nilalaalae ennai maraiththaar;
Saththuru payaththaalae kalanga vidaar,
Sanjalam varaamal angae kaakkiraar;
Aengith thiyangaamal thangach seykiraar.
3. Sooriya jothiyaalae nilal saayaiyum
Kaanappattar polae, thunpam thukkamum
Oppillaa paeranpaam sooriya saayaiyae;
Atal val naḷ ellam sora mattene.