பணிந்திடுவோம்
வேதத்தின் ஒளியில் கடக்கும் பாதையில்
நீங்கா மகிமை காத்திடுமே
அவர் சித்தம் நம்மில் தேவ பிரசன்னத்தில்
என்றும் நம்பி பணிந்திடுவோம்
Ref
நம்பியே நாம் பணிந்திடுவோம்
தேவ அன்பில் களிக்க நாம் பணிந்திடுவோம்
தீமை ஏகிடினும் பாதை மாறிடினும்
மீட்க்கும் நேசர் கை தாங்கிடுவார்
வாதை நோய் துன்பமோ வஞ்சம் பேர் நஷ்டமோ
விலகிடும் நம் யேசுவால்
பாவத்தின் சுமையாய் பொல்லா நம் துயரை
தம் ரத்தத்தால் நீங்க செய்தார்
காக்கும் இயேசு உண்டு அவர் தோளில் சாய்ந்து
என்றும் நம்பி பணிந்திடுவோம்
Veathathin Oliyil Kadakkum paathaiyil
Neenga magimai Kathidumae
Avar sitham nammil Deva pirasanathil
Entrum nambi Paninthiduvom
Ref
Nambiye nam Panithiduvom
Deva anbil kazhikka Nam Paninthiduvom
Theemai Yeahidinum Paathai Maaridinum
Meetkkum Nesar kai thangiduvaar
Vaathai Nooi Thunbamo Vanjam Pear Nastamo
Vilakidum Nam Yesuvaal
Paavathin Sumaiyai Polla nam thuyarai
Tham Rathathaal Neenga seithaar
Kakkum Yesu Undu Avar Tholil Saainthu
Entrum Nambi Paninthiduvom
பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
1. பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
ஒப்பில்லா திருஸ்நானத்தினால்?
பாவதோஷம் நீங்க நம்பினீர்களா?
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?
பல்லவி
மாசில்லா சுத்தமா?
திருப்புண்ணிய தீர்த்தத்தினால்
குற்றம் நீங்கிவிட குணமாறிற்றா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?
2. பரலோக சிந்தை அணிந்தீர்களா?
வல்ல மீட்பர் தயாளத்தினால்?
மறு ஜன்ம குணமடைந்தீர்களா?
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்?
3. மணவாளன் வரக் களிப்பீர்களா
தூய நதியின் ஸ்நானத்தினால்?
மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?
4. மாசு கறை நீங்கும் நீசப்பாவியே
சுத்த இரத்தத்தின் சக்தியினால்!
முக்திப் பேறுண்டாம் குற்றவாளியே
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்!
பார் முன்னணை
1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்
காண மின்னிட்டதே வான்வெள்ளிகள் தாம்.
2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,
ஆயின் பாலன் இயேசு அழவே மாட்டார்;
நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,
தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.
3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,
என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;
உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே
சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.
1. Paar, Munnanai Onril Thottil Inriyae
Paalanaam Nam Iyaesu Kitanthanarae;
Veliyil Pulmeethu Thuunkumpaalan Thaam
Kaana Minnittathae Vaanvellikalthaam.
2. Maa, Maa, Enum Saththam Kaettu Vizhippaar,
Aayin Paalan Iyaesu Azhavaemaattaar;
Naan Naesikkum Naathaa, Neer Noekkip Paarppeer,
Thuukkaththil Neer Thanki Raavellaam Kaappeer.
3. En Naathaa, Enrum Neer Ennai Naesippeer,
Ennoetu Thariththae Anpaay Anaippeer;
Um Paalarthammai Neer Aaseervathiththae
Saerththitum Vin Veettil Thuuyoeraakkiyae.