நான் பாவிதான்
1. நான் பாவிதான், – ஆனாலும் நீர்
மாசற்ற ரத்தம் சிந்தினீர்
‘வா’ என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன்.
2. நான் பாவிதான், – என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே,
என் மீட்பரே, வந்தேன்.
3. நான் பாவிதான், – மா பயத்தால்
திகைத்து, பாவ பாரத்தால்
அமிழ்ந்து மாண்டுபோவதால்
என் மீட்பரே, வந்தேன்.
4. நான் பாவிதான், – மெய்யாயினும்
சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே, வந்தேன்.
5. நான் பாவிதான், – இரங்குவீர்
அணைத்து, காத்து, ரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வந்தேன்.
6. நான் பாவிதான், – அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்
உமக்கு சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வந்தேன்
பக்தரே அண்ணாந்து பாரும்
1.பக்தரே! அண்ணாந்து பாரும்!
யேசு வெற்றி வேந்தராய்
வானில் தோன்ற, மாந்தர் யாரும்
சேவிப்பாரே தாழ்மையாய்.
பல்லவி
வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க!
வாழ்க! ராஜ ராஜரே!
வாழ்க! வாழ்க என்றும் வாழ்க!
வாழ்க! ராஜ ராஜரே!
2.தேவதூதர் க்ரீடம் சூட்ட
ராஜரீகம் செய்கிறார்.
யாரும் ஜெய கீதம்பாட,
க்ரீடதாரியாகிறார்.
3.தீயரும் முண்முடி சூட்டி
நிந்தையாக வாழ்த்தினார்.
தூய தூதர் வெற்றி கூறிச்
சேவித் தாரவாரிப்பார்.
4.பாரும் ராஜ அபிஷேகம்!
ஆரவாரம் கேளுமேன்.
யேசுவின் சர்வாதிகாரம்
பூமி எங்கும் கூறுமேன்
பக்தரே வாரும்
1. பக்தரே வாரும்
ஆசை ஆவலோடும்
நீர் பாரும், நீர் பாரும்
இப்பாலனை;
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!
Chorus
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.
2. தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்;
3. மேலோகத்தாரே,
மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப்
போற்றுமேன்;
விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!
4. இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்.