Tamil Hymn அ-ஓ

இன்று கிறிஸ்து எழுந்தார்


1. இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார்; அல்லேலூயா!
சிலுவை சுமந்தவர்,அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர்,அல்லேலூயா!


2. ஸ்தோத்ரப் பாட்டுப் பாடுவோம்,அல்லேலூயா!
விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,அல்லேலூயா!
அவர் தாழ்ந்துயர்ந்தாரே;அல்லேலூயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே,அல்லேலூயா!


3. பாடநுபவித்தவர்,அல்லேலூயா!
ரட்சிப்புக்குக் காரணர், அல்லேலூயா!
வானில் இப்போதாள்கிறார்;அல்லேலூயா!
தூதர் பாட்டைக் கேட்கிறார்,அல்லேலூயா!


1. intu kiristhu elunthaar,allaelooyaa!
intu vetti siranthaar;allaelooyaa!
siluvai sumanthavar,allaelooyaa!
motchaththaith thiranthavar,allaelooyaa!


2. sthothrap paattup paaduvom,allaelooyaa!
vinnnnin vaenthaip pottuvom,allaelooyaa!
avar thaalnthuyarnthaarae;allaelooyaa!
maanthar meetpar aanaarae,allaelooyaa!


3. paadanupaviththavar,allaelooyaa!
ratchippukkuk kaaranar,allaelooyaa!
vaanil ippothaalkiraar;allaelooyaa!
thoothar paattaைk kaetkiraar,allaelooyaa!

 


ஈடில்லாத தூய அன்பே


ஈடில்லாத தூய அன்பே,
விண் பேரின்பம் பூவிலே,
எம்மை உந்தன் விந்தை வாசம்
வைத்து கிருபையால் சூடும்.
மா தயாபரர் நீர் ஸ்வாமி
உம் அன்பிற்களவேது?
இரட்சிப்பினால் எம்மை காத்து
வாரும் எம் அஞ்சும் நெஞ்சில்.


ஊதும் உமதன்பின் ஆவி
நொந்த எங்கள் நெஞ்சிலே,
உம்மாலே யாம் ஏற்போம்
எங்கள் நிம்மதியின் நிச்சயம்.
பாவம் செய்யும் சுவாபம் நீக்கும்
நீரே அல்பா ஒமேகா,
போக்கும் எமதவ்விஸ்வாசம்
எங்கள் உள்ளம் மீண்டிடும்.


எல்லாம் வல்லோரே நீர் வாரும்
யாம் உம் வாழ்வை பெற்றிட,
வேகம் உமதாலையமே
வந்தே மீண்டும் ஏகாமல்,
உம்மை என்றும் போற்றி வாழ்த்தி
சேவை செய்தே மேலோர் போல்,
வேண்டி நின்றே புகழ் பாடி
ஆர்ப்பரிப்போம் உம் அன்பில்.


உம் படைப்பை கரை ஏற்றும்
யாம் எக்குற்றம் அற்றோராய்,
உம் இரட்சிப்பை கண்டே ஏற்று
முற்றும் மாற்றம் பெற்றோராய்.
மகிமை மேல் மகிமையால்
விண் வீடடையும் வரை,
எம் கிரீடம் உம் பாதம் வைப்போம்
வியந்தன்பை போற்றியே.

 


உம் கிருபை தயவும் மகா பெரிது


உம் கிருபை தயவும் மகா பெரிது,
நிழல் போல் மாறிடும் தன்மையல்ல,
மாறிடாதென்றும் உம் தயவன்ரோ?
நேற்றுமின்றும் என்றும் மாறிடாதே,


பல்லவி
மகா பெரியது, உம் கிருபை தயவும்,
அனுதினம் காண்போம் புது கிருபை,
என் தேவை யாவுமே நீர் தாம் சந்தித்தீர்
மகா பெரியதும் கிருபை என் மேல்.


உம் ராட்ஜியம் வந்திட வேண்டுகின்றோம் யாம்,
வாரும் நீர் வேகமாய் காலைத்தோன்ற,
இன் புது பாடல் யாம் பாடிடுவோமே,
சாத்தானொழிந்திட உம் ராட்ஜியமே.


கோடை குளிர் பனி வசந்த காலம்,
சூரிய சந்திரனின் பாதையிலே,
யாவும் ஒன்றாய் நின்றே சாட்சியாய் கூற,
உம் மகா உண்மையன்பும் கிருபையும்.


பாவத்தின் மன்னிப்பு மெய் சமாதானம்,
உம் பிரசன்னமுமே தேற்றுதலும்,
இந்நாளின் வல்லமை நாளை நம்பிக்கை,
ஆசீரெல்லாம் தந்து ஆயிரமாய்.