Tamil Hymn அ-ஓ

ஆனந்த களிப்பாய் நாம் பாடுவோம்


தூதர் வாழ்த்தி பாடிப் போற்றினரே,
மேய்பர் வயல்வெளிகளில் காத்து நிற்க
தம் மந்தையை இரவின் குளிரில்
மிக ஏழை எளிய மக்களாமே,


பல்லவி
ஆனந்த களிப்பாய் நாம் பாடுவோம்
நம் இஸ்ரவேலின் ராஜனை.


விண்ணில் நோக்கிப்பார்க்க மின்னும்
நட்சத்ரமே, தூர கிழக்கில் அதோ
ப்ரகாசிக்குதே,பூமியின்மேல் ஓர்
பேரொளியாய் இரவும் பகலும்
தோன்றி நின்றதே,


அதோ நட்சத்ரம் ஒளிகாட்டிடவே,
மூன்று ஞானியர் தூர தேசம் முதல்
தாங்கள் தேடி வரும் கோவை கண்டிடவே,
அதை பின் சென்று தொடர்ந்தே வந்தனரே,


விந்தை அந்த நட்சத்ரம் தென்மேற்கில்
சென்று, பெத்லகேமின் சிற்றூரில் ஓய்ந்ததே,
அங்கேயே தங்கி எங்கும் செல்லாமலே,
இயேசு பாலன் பிறந்த இடம் நின்றதே,


அவ்விடம் அடைந்து அம்மூவருமே,
மிக பக்தியாய் சாஷ்டாங்கமாய் விழுந்து,
பொன்னும் வெள்ளைப்போளமும்
தூபவர்க்கமும் படைத்தே மகிழ்ந்தனர்

 


ஆனந்தமாய் ஸ்தோத்தரிப்போம்


ஆனந்தமாய் ஸ்தோத்தரிப்போம்,
வல்ல அன்பின் ஆண்டவா,
மலர் போலே எங்கள் மனம்
உம் முன்னே மலர்ந்ததே,
எங்கள் துக்கம் பாவமகற்றும்,
அவிசுவாசம் நீக்குமே,
நித்யானந்தம் தருவீரே
மெய் ஒளியால் நிரப்பும்.


மகிழ்சியாய் உம்மை சூழ்ந்தே
மண்ணும் விண்ணும் வாழ்த்துதே,
போற்றும் வானோர் விண்மீன் கூட்டம்
துதிகளில் உம் வாசம்,
வயல்வெளி காடு மலைகள்
பள்ளத்தாக்கு கடலலையும்
பூவும் குயிலும் பாயும் நீர்வீழ்ச்சி
அழைக்கிறதானந்திக்க.


நீரே எல்லாம் தந்து மன்னித்தீர்
ஆசீர்வாதம் ஆசி நீர்,
ஜீவ ஊற்றும் வாழ்வின் இன்பம்
ஆழ்கடல் மகிழ் ஓய்வும்,
நீரே தந்தை சகோதரர்
அன்பில் வாழும் எல்லாமே,
அனைவரையும் யாம் நேசிக்க
நித்தய மகிழ்சியில் சேர்த்திடும்.


மாந்தரே நாம் கூடிஅர்ப்பரிப்போம்
விண்மீன் பாடல் தொடர்ந்திட,
எங்கள் தந்தை உந்தன் அன்பு
ஒன்றாய் எம்மை இணைக்குமே,
பாடி போற்றி முன் செல்வோமே
வெற்றி தாரும் குழப்பத்திலே,
ஆனந்த தொனிதான்
உம்மிடம் நடத்தும்
வாழ்வின் வெற்றி பாடலே.

 


இம்மானுவேலே வாரும்


1. இம்மானுவேலே வாரும், வாருமே,
மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே;
மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்


Ref
மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே,
இம்மானுவேலின் நாள் சமீபமே.


2. ஈசாயின் வேர்த் துளிரே, வாருமே,
பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே;
பாதாள ஆழம் நின்று ரட்சியும்,
வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும்.


3. அருணோதயமே, ஆ, வாருமே,
வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே;
மந்தார ராவின் மேகம் நீக்கிடும்,
இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும்.


4. தாவீதின் திறவுகோலே, வாருமே,
விண் வாசலைத் திறந்து தாருமே;
ஒடுக்கமாம் நல் வழி காத்திடும்,
விசாலமாம் துர்ப் பாதை தூர்த்திடும்.


5. மா வல்ல ஆண்டவா, வந்தருளும்;
முற்காலம் சீனாய் மலைமீதிலும்
எக்காளம் மின்னலோடு தேவரீர்
பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்.