Tamil Hymn அ-ஓ

இயேசுவே உம்மை தியானித்தால்


1.இயேசுவே உம்மை தியானித்தால்
உள்ளம் கனியுமே
கண்ணார உம்மைக் காணுங்கால்
பரமானந்தமே.


2.மானிட மீட்பர் இயேசுவின்
சீர் நாமம் போலவே
இன் கீத நாதம் ஆய்ந்திடின்
உண்டோ இப்பாரிலே?


3.நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு
நம்பிக்கை ஆகுவீர்
நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு
சந்தோஷம் ஈகுவீர்.


4.கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர்
ஈவீர் எந்நன்மையும்
கண்டடைந்தோரின் பாக்கியசீர்
யார் சொல்ல முடியும்?


5.இயேசுவின் அன்பை உணர்ந்து
மெய் பக்தர் அறிவார்
அவ்வன்பின் ஆழம் அளந்து
மற்றோர் அறிந்திடார்


6.இயேசுவே, எங்கள் முக்தியும்
பேரின்பமும் நீரே
இப்போதும் நித்திய காலமும்
நீர் எங்கள் மாட்சியே.

 


இயேசுவே கல்வாரியில்


1. இயேசுவே! கல்வாரியில்
என்னை வைத்துக்கொள்ளும்;
பாவம் போக்கும் ரத்தமாம்
திவ்விய ஊற்றைக் காட்டும்.


Chorus
மீட்பரே! மீட்பரே!
எந்தன் மேன்மை நீரே;
விண்ணில் வாழுமளவும்
நன்மை செய்குவீரே.


2. பாவியேன் கல்வாரியில்
ரட்சிப்பைப் பெற்றேனே;
ஞான ஜோதி தோன்றவும்
கண்டு பூரித்தேனே.


3. ரட்சகா! கல்வாரியின்
காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜீவிக்க
என்னை ஆள்வீராக.


4. இன்னமும் கல்வாரியில்
ஆவலாய் நிற்பேனே;
பின்பு மோட்ச லோகத்தில்
என்றும் வாழுவேனே


1.Yesuvae kalvaariyil
Ennaivaiththu kozhzhlum;
Paavam pokkum raththamaam
Thivya oottrai kaattum.


Chorus
Meetparae! Meetparae!
Enthan maenmai neerae;
Vinnil vaazhlumazhlavum
Nanmai seikuveerae.


2.Paaviyaen kalvaariyil
Ratchippai pettraenae;
Gnaana jothi thontravum
Kandu pooriththaenae.


3.Ratchakaa! Kalvaariyin
Kaatchi kandonaaka
Pakthiyodu jeevikka
Ennai aazhlveeraaka.


4.Yinnamum kalvaariyil
Aavalaai nirpaenae;
Pinpu motcha lokaththil
Entrum vaazhluvaenae.

 


இயேசுவை நம்பி


1. இயேசுவை நம்பிப் பற்றிக்கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவ குமாரன் இரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்


பல்லவி
இதென் கெம்பீரம்! இதென் கீதம்!
மீட்பரைப் பாடிப் போற்றிடுவேன்!
இதென் கெம்பீரம்! இதென் கீதம்
இயேசு என் நேசர் பாடிடுவேன்


2. அன்பு பாராட்டி காப்பவராய்
எந்தனைத் தாங்கிப் பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்றும் நீங்காமல் பாதுகாப்பார்


3. மெய் சமாதானம் ரம்மியமும்
தூய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்துவிட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்!


Yesuvai nambi patri konden Lyrics in English


Yesuvai nampip pattik konntaen
maatchimaiyaana meetpaip petten
thaevakumaaran iratchaை seythaar
paaviyaam ennai aettuk konndaar


Ref
Yesuvaip paatip pottukiraen
naesaraip paarththup poorikkiraen
meetparai nampi naesikkiraen
needuli kaalam sthoththarippaen


anpu paaraattik kaappavaraay
enthanaith thaangi pooranamaay
inpamum niththam oottukiraar
innum neengaamal paathukaappaar


mey samaathaanam rammiyamum
thooya thaevaavi vallamaiyum
punnnniya naathar thanthuvittar
vinnnnilum sernthu vaalach seyvaar