Tamil Hymn அ-ஓ

ஆத்மமே, உன் ஆண்டவரின்


1. ஆத்மமே உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து ;
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து;
அல்லேலுயா, என்றென்றைக்கும்
நித்ய நாதரைப் போற்று .


2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய்த் துதி ;
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி ;
அல்லேலுயா, அவர் உண்மை
மா மகிமையாம், துதி .


3. தந்தைபோல் மா தயை உள்ளோர் ;
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம்கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே ;
அல்லேலுயா , இன்னும் அவர்
அருள் விரிவானதே .


4. என்றும் நின்றவர் சமூகம்
போற்றும் தூதர் கூட்டமே ;
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவீர் நீர் பக்தரே ;
அல்லேலுயா , அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே .

 


ஆழ கல்லரையில்


ஆழ கல்லரையில் இயேசு என் ஆண்டவர்,
காத்திருந்தாரவர் இயேசு மீட்பர்.


பல்லவி
ஆண் டவர் உயிர்த்தெழுந்தார்,
வெற்றி கொண்டே சாவின் சாபத்தை,
இருள் மீதே ஜெயம் கொண்டே வீரராய்
இன்றும் வாழ்கிறாரே என்றும் ஆளவே,
எழுந்தார் எழுந்தார், அல்லேலூயா எழுந்தார்.


கல்லரையில் இல்லை இயேசு என் ஆண்டவர்,
மூடினர் வீணன்ரோ? இயேசுவையே.


மரணம் பற்றாது, இயேசு என் ஆண்டவர்,
உடைத்தெரிந்தாரே, இயேசு மீட்பர்.

 


ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்


ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
கிறிஸ்தேசு ஜனித்ததால்
வின் மன்னோரும் எவ்வான்மாவும்
என்றென்றும் பாடிடவே
என்றென்றும் பாடிடவே
என்றென்றும் என்றென்றும் பாடிடவே


1. ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்
நம் மீட்பர் ஜனித்ததால்
வான் பூமியும் சிருஷ்டிகளும்
என்றென்றும் போற்றிடிடவே
என்றென்றும் போற்றிடிடவே
என்றென்றும் என்றென்றும் போற்றிடிடவே


2. உன்னதத்தில் மகிமையும்
பூமியில் சமாதானமும்
மனிதர் மேல் அன்பும் நிலைத்து நிற்கவும்
நம் மீட்பர் ஜென்மித்தார்
நம் மீட்பர் ஜென்மித்தார்
நம் மீட்பர் இயேசு ஜென்மித்தார்


Arparipom Innanaalil
aarpparippom in nannaalil
kiristhaesu janiththathaal
vin mannorum evvaanmaavum
ententum paatidavae
ententum paatidavae
ententum ententum paatidavae


1. Aarpparippom in nannaalil
nam meetpar janiththathaal
vaan poomiyum sirushtikalum
ententum pottitidavae
ententum pottitidavae
ententum ententum pottitidavae


2. Unnathaththil makimaiyum
poomiyil samaathaanamum
manithar mael anpum nilaiththu nirkavum
nam meetpar jenmiththaar
nam meetpar jenmiththaar
nam meetpar Yesu jenmiththaar