அந்த தொண்ணூறும் ஒன்பதும்
1. அந்த தொண்ணூறும் ஒன்பதும் பத்திரமாய் இருக்க
கூடாரத்தில், ஒன்று மட்டும் அலைந்து
காட்டில் தொலைந்து தங்க வாசல் வெளியே,
அது பாலைவனம் எங்கும் தூரமாய்
நல் மேய்ப்பனின் அன்பான மேய்ச்சலின்றி,
நல் மேய்ப்பனின் அன்பான காவலின்றி.
2. இந்த தொண்ணூறும் ஒன்பதும் பத்திரமாய் இருக்க
போதாதா? நல் மேய்ப்பன் சொல்கிறார்,
எந்தன் ஆடது என்னை விட்டே சென்றதே,
அந்த பாதையும் கடினம் தூரம் தான்,
ஆனாலும் நான் சென்று தேடிடுவேன்,
நான் சென்றங்கே என் ஆட்டை தேடிடுவேன்.
3. நல் மேய்ப்பன் கடந்த ஆழம் தூரம்
யார் அறிவார்? அவர் கடந்த இருளும்
ஆம் தன் ஆட்டை மீட்க சென்ற தால்,
அதன் ஓசை கேட்டு சென்றங்கே,
ஆம் சாகும் தருணம் சப்தம் கேட்டு,
ஆம் சாகும் தருணம் கண்டெடுத்தார்.
4. நீர் நடந்த பாதையில் இரத்தம் சிந்தியதால்
பாதை காட்டுதே, அது தொலைந்து அலைந்த
ஆட்டை மீட்க மீட்டு மந்தை சேர்க்க,
ஆம் உந்தன் கைகளில் காயம் ஏன்?
ஆம் இன்று முட்களும் துளைத்ததே,
ஆம் இன்று முட்களும் துளைத்ததே.
5. ஆம் மலைகள் மேலும் பாறைகள் மீதும்
கேட்குதே, மேலோக வாசலில் ஆனந்தம்
நான் மீட்டேன் எந்தன் ஆட்டை,
ஆம் தூதரும் சிம்மாசனம் முன்பே,
ஆம் ஆண்டவர் மீட்டார் தம் சொந்தத்தையே,
ஆ ஆனந்தம் ஆண்டவர் மீட்டுக்கெண்டார்.
ஆ அற்புத இயேசு
அருள் ஏராளமாய்ப் பெய்யும்
அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே
பல்லவி
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே
அருள் ஏராளமாய்ப் பெய்யும் மேகமந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம்
அருள் ஏராளமாய்ப் பெய்யும் யேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும் இறங்கி தங்கிடுமேன்
அருள் ஏராளமாய்ப் பெய்யும் பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே
Arul aeraalamaayp peyyum uruthi vaakkithuvae
Aaruthal thaeruthal seyyum thiralaam mikuthiyae
Pallavi
Arul aeraalam arul avasiyamae
Arpamaay sorpamaay alla thiralaay peyyattumae
Arul aeraalamaayp peyyum maekamanthaaramunndaam
Kaadaana nilaththilaeyum selippum poorippumaam
Arul aeraalamaayp peyyum yaesu vantharulumaen
Ingulla koottaththilaeyum irangi thangidumaen
Arul aeraalamaayp peyyum poliyum ichchanamae
Arulin maariyaith thaarum jeeva thayaapararae