Tamil Hymn அ-ஓ

என் மீட்பர் ரத்தம் சிந்தினார்


1. என் மீட்பர் ரத்தம் சிந்தினார்,
மா நீதியும் சம்பாதித்தார்;
என் சொந்த நீதி வெறுத்தேன்,
இயேசுவின் நாமம் நம்புவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.


2. கார் மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம், அவரை
எப்போதும்போல நம்புவேன்,
மாறாதவர் என்றறிவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.


3. மரண வெள்ளம் பொங்கினும்,
என் மாம்சம் சோர்ந்து போயினும்,
உன் வாக்குத்தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;
நன் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.


4. நியாயத்தீர்ப்புக் காலத்தில்
எக்காள சத்தம் கேட்கையில்,
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
அநீதன் என்னை மூடுமே;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

 


என் முன்னே மேய்ப்பர்


1. என் முன்னே மேய்ப்பர் போகிறார்
நல்மேய்ப்பராகக் காக்கிறார்
ஓர்காலும் என்னைக் கைவிடார்
நேர் பாதை காட்டிப் போகிறார்.


Ref
முன் செல்கின்றார்! முன் செல்கின்றார்!
என் முன்னே சென்றுபோகிறார்!
நல் மேய்ப்பர் சத்தம் அறிவேன்
அன்போடு பின்சென்றேகுவேன்.


2. கார் மேகம் வந்து மூடினும்
சீர் ஜோதி தோன்றி வீசினும்
என் வாழ்வு தாழ்வில் நீங்கிடார்
என்றைக்கும் முன்னே போகிறார்.


3. மெய்ப் பாதைகாட்டி! பின்செல்வேன்
தெய்வீக கையால் தாங்குமேன்
எவ்விக்கினம் வந்தாலும் நீர்
இவ்வேழை முன்னே போகிறீர்.


4. ஒப்பற்ற உம் காருணியத்தால்
இப்பூமி பாடு தீருங்கால்
நீர் சாவை வெல்லச் செய்குவீர்
பேரின்பம் காட்டி முன்செல்வீர்.

 


என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்


என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்! அப்போதென் துக்கம் மறப்பேன் !
பிதாவின் பாதம் பணிவேன் என் ஆசையாவும் சொல்லுவேன் !
என் நோவுவேளை தேற்றினார் என் ஆத்ம பாரம் நீக்கினார்
ஒத்தாசை பெற்று தேறினேன் பிசாசை வென்று ஜெயித்தேன்


என் ஜெபவேளை வாஞ்சிப்பேன்! மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்
மன்றாட்டைக் கேட்போர் வருவார் பேர் ஆசீர்வாதம் தருவார்
என் வாக்கின் மேல் விசவாசமாய் என் பாதம் தேடு ஊக்கமாய்
என்றோர்க்கென் நோவைச் சொல்லுவேன் இவ்வேளையை நான் வாஞ்சிப்பேன்


என் ஜெபவேளை வாஞ்சிப்பேன் ! ஆனந்த களிப்படைவேன்
பிஸ்காவின் மேலே ஏறுவேன் என் மோட்ச வீட்டை நோக்குவேன்
இத்தேகத்தை விட்டேகுவேன் வீண் நித்திய வாழ்வைப் பெறுவேன்
பேரின்ப வீட்டில் வசிப்பேன் வாடாத க்ரீடம் சூடுவேன் !