எந்தன் ஜீவன்
1. எந்தன் ஜீவன் இயேசுவே
சொந்தமாக ஆளுமே
எந்தன் காலம் நேரமும்
நீர் கையாடியருளும்.
2. எந்தன் கை பேரன்பினால்
ஏவப்படும்; எந்தன் கால்
சேவை செய்ய விரையும்
அழகாக விளங்கும்.
3. எந்தன் நாவு இன்பமாய்
உம்மைப் பாடவும், என் வாய்
மீட்பின் செய்தி கூறவும்
ஏதுவாக்கியருளும்
4. எந்தன் ஆஸ்தி, தேவரீர்
முற்றும் அங்கீகரிப்பீர்;
புத்தி கல்வி யாவையும்
சித்தம்போல் பிரயோகியும்.
5. எந்தன் சித்தம், இயேசுவே,
ஒப்புவித்துவிட்டேனே;
எந்தன் நெஞ்சில் தங்குவீர்
அதை நித்தம் ஆளுவீர்.
6. திருப்பாதம் பற்றினேன்
எந்தன் நேசம் ஊற்றினேன்
என்னையே சமூலமாய்
தத்தம் செய்தேன் நித்தமாய்.
எல்லா படைப்பும் ஒன்றாக
எல்லா படைப்பும் ஒன்றாக,
வல்ல நம் இராஜன் போற்றுவோம்,
அல்லேலூயா அல்லேலூயா
நீர் மா பிரகாச சூரியன்,
மென் வெள்ளி ஒளி சந்திரன்,
பல்லவி
போற்றுவோமே, புகழ்பாடி,
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஓங்கியே வீசும் காற்றே நீ,
வானிலுலவும் முகிலே,
அல்லேலூயா அல்லேலூயா
மெல்ல எழும் நிலவே நீ,
மாலை மின்னும் சிற்றொளியே,
ஓடும் தெளிர் நீரோடையே,
பாடலொன்றை நீ பாடியே,
அல்லேலூயா அல்லேலூயா
வன் சக்தி தரும் ஜுவாலையே,
நீ தரும் அனல் ஒளியும்,
பூமித்தாயே, நாளும் நீ,
ஆசீர் பொழிந்தென்னாளும்,
அல்லேலூயா அல்லேலூயா
பூ காய்கள் கனிதரும் நீ,
யாவும் நல் ஆசீர் பேணுதே,
மென் மனம் கொண்ட மாந்தரே,
மன்னித்தும் பங்கை படைப்பீர்,
அல்லேலூயா அல்லேலூயா
துன்பத்தினூடே துக்கித்தே,
யாவும் வைப்பீரவர் பாதம்,
நன் மரணமே இனிமை,
காத்திரு என் கடைஸ்வாசம்,
அல்லேலூயா அல்லேலூயா
என் தந்தை வீடே சேர்த்திட,
கிறிஸ்தேசு சென்ற பாதையில்,
யாவும் கர்த்தரை போற்றட்டும்,
தாழ்மையாய் வீழ்ந்து குனிந்து,
அல்லேலூயா அல்லேலூயா
தந்தை சுதன் தூயாவியே,
மூவராம் ஏகர் போற்றுவோம்.
எவ்வாரே நான் பெற்றுக்கொண்டேன்
எவ்வாரே நான் பெற்றுக்கொண்டேன்,
என் மீட்பரின் மா தூய இரத்தத்தாலோ?
மாண்டார் எனக்காக, என்னால்தான்,
ஆம் தம் ஜீவன் எனக்காய் தந்ததேன்?
விந்தை இதே ஆம் விந்தையிலும் விந்தையே,
எனக்காக மரித்ததே விந்தையிலும்
விந்தை, அற்புதம், மா அற்புதம்
மா அற்புதம் மா அற்புதமிதே.
அனாதி தேவன் மரிப்பதுவோ?
அதாராய்ந்து அறியகூடுமோ?
போற்ற முயன்றாரே சேராபீம்,
அன்பின் ஆழத்தை பார் நீரே என்றோ?
கிருபையிதே பூவோர் போற்றி பாடி வாழ்த்தட்டும்,
மா கிருபையிதே கிருபையிதே தூதர்க்கும்
சந்தேகம் வேண்டாமே, மா கிருபையே
மா கிருபையே சந்தேகம் வேண்டாம்.
விந்தையாய் வான்லோகம் விட்டு,
ஒர் அளவில்லா அன்பாலே வந்தாரே,
தம் அன்பை வைத்து நம் மீதிலே,
ஆபிராமின் பிள்ளைகட்காகவே,
ஈடில்லா நன் கொடை ஈந்து என்னை தேடியே,
தம் இணையில்லா தயவாலே தேடி
என்னை தேடி வந்தாரே,என்னைத்தேடி,
என் தேவன் தேடியே வந்தாரே.
நான் நீண்ட நாள், கட்டுண்டு கிடந்தேன்,
கட்டுண்ட எந்தன் ஆன்மத்தை மீட்க்கவே,
பாவ இருளின் பிடி மீள, என் கண்களின் மீதே
ஒளி தோன்ற, மீண்டேன் நான் மீளா குகையினின்றே
மீண்டேனே, நான் கட்டவிழ்ந்தே
பறந்துள்ளம் பொங்கி உம்மை என்றும்
பின் சென்றேன் நான் மீண்டேனே
கட்டவிழ்ந்தே உம்மை பின் சென்றேனே.
இன்றும் அந்த சப்தம், கேட்க்குதே,
என் பாவம் முற்றும் அகன்றதென்றே,
என் அருகில் இன்னும் நின்றதே,
நான் விண்ணில் ஏகாவண்ணம் நிற்கையில்,
காயம் செய்யும் மாய விந்தை கண்டேன் மீட்பரே,
உம் காயம் செய்யும் விந்தை கண்டேன்
மீட்பரே நானே, என் மீட்பரே, நான் உணர்ந்தேன்
என் மீட்பரே எந்தன் உள்ளத்தில்.
சாபமெல்லாம் இனி இல்லை,
நான் உந்தன் சொந்தம் நீர் எந்தன் இயேசுவே,
உம்மிலே நீர் என்றும் என்னிலே,
நானும் நீதியின் வஸ்திரம் அணிந்தேன்,
வந்தேனிதோ நானும் உம் சமூகம் நானுமே,
என் ஜீவ கிரீடம் பெற்றிடவே உம் சமூகமே,
கிறிஸ்தேசுவே, நான் வந்தேனே
என் ஜீவ கிரீடம் பெறவே.